பாடல்:
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை நதிசூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. 5
பொருள்:
விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு எருதின் மேல் அமர்ந்து வரும் நம் பரம்பொருளாகிய சிவபெருமான், அடர்ந்து கருத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்துள்ளான். அதனால், கொடிய சினத்தையுடைய அசுரர்கள், முழங்குகின்ற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்சபூதங்கள் முதலானவையெல்லம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 1
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 4
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 6
No comments:
Post a Comment