Saturday, January 2, 2016

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 9

பாடல்:
பலபல வேடமாகும் பரன் நாரி பாகன் 
   பசுவேறும் எங்கள் பரமன் 
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்து என் 
   உளமே புகுந்த   அதனால் 
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் 
   வருகாலமான பலவும் 
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல 
   அடியார் அவர்க்கு மிகவே.                   9
பொருள்:
பல பல வேடங்கள்/கோலங்கள் கொள்கிற பரம்பொருள், மாதோருபாகனும், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை சூடியவனும், தன் இடப்பக்கத்தில் உமையவளோடு எருதின்மேல் வந்து என் உள்ளத்தில் புகுந்து தங்கியுள்ளான். அதனால், தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திருமால்,வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல், மேரு முதலான மலைகள் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்வர். அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 1
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 8
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 10

No comments:

Post a Comment