Saturday, January 2, 2016

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 7

பாடல்:
செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக 
      விடையேறு செல்வன் அடைவார் 
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து என் 
      உளமே புகுந்த அதனால் 
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் 
      வினையான வந்து நலியா 
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
      அடியார் அவர்க்கு மிகவே.               7
பொருள்:
செம்பு போன்ற இளந்தனங்களையுடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, எருதின் மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னையடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல்(சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையாமல் சிவனடியார்களுக்கு மிகவும் நல்லதே நடக்கும்.

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 1
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 6
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 8

No comments:

Post a Comment