Saturday, January 2, 2016

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 8

பாடல்:
வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து 
      மடவாள் தனோடும் உடனாய் 
வாண்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் 
      உளமே புகுந்த அதனால் 
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தனோடும் 
      இடரான வந்து நலியா 
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
      அடியார் அவர்க்கு மிகவே.                 8
பொருள்:
அன்று அம்பெய்திய மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், எருதின்மேல் (விடை -விலங்கினத்தில் பெரும்பாலும் ஆண் பருத்திருப்பதால், விடை எனப்படுகிறது) தன் இடப்பக்கத்தில் உமையம்மையாரை உடையானும், தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றைப்பூ ஆகியனவற்றை சூடியவனுமாகிய என் பரமன் உமையாளோடு என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னான இராவணன்(பிறன்மனை நாடியதால் ஏற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும் அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 1
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 7
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 9

No comments:

Post a Comment