Friday, January 1, 2016

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 6

பாடல்:
வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர் 
   மடவாள் தனோடும் உடனாய் 
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து என் 
   உளமே புகுந்த அதனால் 
கோளரி உழுவையோடு கொலை யானை கேழல் 
    கொடு நாகமோடு கரடி 
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
    அடியார் அவர்க்கு மிகவே.                 6

பொருள்:
ஒளியும் வரியும் கொண்ட புலித்தோல்(அதள்) ஆடையும், வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த(இன்று மலர்ந்த) வன்னி கொன்றை மலர்களையும் கங்கை நதியையும் தன் முடிமேல் அணிந்து, உமையம்மையாரோடு என் உள்ளத்தில் புகுந்து தங்கியுள்ளத்தால், கொல்லும் வலிய புலி(கோளரி உழுவை), கொலையானை, பன்றி(கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு நல்லனவே செய்யும்.

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 1
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 5
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 7

No comments:

Post a Comment