வரலாறு:
குறிப்பு : இந்த வரலாற்றை பற்றி என்னிடம் எந்த ஆதாரமும் கிடையாது. நான் இணையத்தில் படித்ததை இங்கு பதிவிடுகிறேன்.கோளறு பதிகம் திருஞனாசம்பந்தரால் சிவபெருமானுக்காக பாடப்பட்டது. 63 நாயன்மார்களில் இவரும் ஒருவர். முன்னொரு காலத்தில் பாண்டிய நாட்டில் சமண மதம் தழைத்தோங்கி இருந்ததாகவும், மன்னனும் சமண மதம் தழுவியதாகவும் கூறப்படுகிறது.(பொதுவாக பாண்டிய நாட்டில் சைவ மதமே அதிக மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது). அச்சமயத்தில் பாண்டிய நாட்டின் அரசி அப்பர் மற்றும் திருஞனசம்பந்தரையும் சைவ மதத்தை பரப்ப அழைக்கப்பட்டார். அப்பொழுது இருவரும் திருமறைக்காட்டில் (வேதாரண்யம் ) இருந்தனர். அந்த காலகட்டத்தில் சமணர்கள் மாந்திரிகத்தில் சிறந்து விளங்கியதாகக் கூறப்படுகிறது. ஆதலால், மாணிக்கவாசகர் சிறிது ஐயப்பட்டார். அவரது அச்சத்தைப் போக்கும் விதத்தில் சம்பந்தர் இப்பாடலைப் பாடியதாகக் கூறப்படுகிறது. இப்பாடலில் அவர் பாடியது என்னவெனில் ஒரு நல்ல சிவனடியாருக்கு கோள்களோ, தீய மந்திரங்களோ, காட்டு விலங்குகளோ எந்த தீங்கும் செய்யாது என்பதுவாகும்.
பாடல்:
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவைக்கு மிகவே. 1
பொருள்:எம்பெருமான் மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு (பார்வதி) தன் உடம்பினில் பாகம் கொடுத்தவனுமாகிய சிவபெருமான் (அர்த்தநாரிஸ்வரர்), உலகில் உள்ள உயிர்களின் நன்மைக்காக பாற்க்கடலில் இருந்து வந்த ஆலகால விடத்தை அருந்தித் தன் திருக்கழுத்தில் தாங்கியவனும் இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு , களங்கமில்லாத பிறை நிலவையும் கங்கையையும் தன் திருமுடிதனில் அணிந்து கொண்டு இருப்பவனுமாகிய எம்பெருமான் ஈசன் என் உளம் (உள்ளம் ,மனம்) முழுவதும் நிறைந்து சிவசிந்தையில் நான் இருப்பதால் சூரியன்(=ஞாயிறு), சந்திரன்(=திங்கள்,மதி), செவ்வாய், புதன், குரு(=வியாழன்),சுக்கிரன்(=வெள்ளி), சனி மற்றும் பாம்பு கிரகங்களான ராகு ,கேது என்னும் ஒன்பது கோள்களும் ஒரு குற்றமும் அற்ற என் போன்ற சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்.
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 2
No comments:
Post a Comment