Sunday, October 12, 2014

ஆத்திச்சுடி - உயிர் வருக்கம்

கடவுள் வாழ்த்து

பாடல்:
 “ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
 ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே!!”
ஆத்தி சூடி – திருவாத்தி மலர்மாலையை அணிந்த
யமர்ந்த – சிவபெருமானால் விரும்பப்பட்ட ( மேல் அமர்ந்த )
தேவனை- ஆனைமுகக் கடவுளை
ஏத்தி ஏத்தி – பலகாலும் (மேலும் மேலும்)
தொழுவோம் யாமே – நாம் வணக்கம் செய்வோம்
பொருள்:
 திருவாத்தி மலர்மாலையை அணிந்த சிவபெருமானால் விரும்பப்பட்ட ஆனைமுகக் கடவுளை நாம் பலகாலும் வணக்கம் செய்வோம்!!

உயிர் வருக்கம்
1)   அறஞ்செய விரும்பு
(அறம் – தருமம்)
தருமம் செய்ய நீ விரும்புவாயாக!!
2)   ஆறுவது சினம்
(சினம் -கோபம்; ஆறுவது- தணிவது)
கோபம் தணிந்து விடக்கூடிய தன்மையுடையது!!
3)   இயல்வது கரவேல்
(இயல்வது- இயன்ற; கரவேல்-தருமத்தை செய்யாமல் இரூத்தல் கூடாது)
செய்வதற்கு இயன்ற தருமத்தை செய்யாமல் இருத்தல் கூடாது!!
4)   ஈவது விலக்கேல்
(ஈவது- கொடுப்பதை; விலக்கேல்-தடுக்காதே)
ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதைத் தடுக்காதே !!
5)   உடையது விளம்பேல்
(உடையது- உன்னிடம் உள்ளதை; விளம்பேல்- கூறாதே)
உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளை பலரும் அறியும்படி கூறாதே ( பெருமையாக பேசாதே) !!
6)  ஊக்கமது கைவிடேல்
(ஊக்கமது – உள்ளக் கிளர்ச்சியை; கைவிடேல் – தளர்ந்து போக விடாதே)
ஒரு காரியத்தை செய்தக்கண் உண்டாகிய உள்ளக் கிளர்ச்சியை தளர்ந்து போக விடாதே!!
7)   எண்ணெழுத் திகழேல்
(எண் – கணிதம்; எழுத்து- இலக்கண நூல்; இகழேல் – இகழ்ந்து ஓதுக்கி விடாதே)
கணித நூல் ,இலக்கண நூல் முதலியவைகளை இகழ்ந்து ஓதுக்கி விடாமல் கற்க வேண்டும்.
8)   ஏற்பது இகழ்ச்சி
(ஏற்பது – பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி – இழிவு தரும்)
பிறரிடம் சென்று யாசித்தல் இழிவு தரும்.
9)   ஐயமிட்டு உண்
(ஐயமிட்டு – கேட்பவற்கு கொடுத்து)
கேட்பவற்கு கொடுத்து உண்ண வேண்டும்
10)  ஒப்புர வொழுகு
(ஒப்புர – உலக போக்கிற்கு எற்றவாறு; ஒழுகு – நட)
உலக போக்கிற்கு எற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.
11) ஓதுவது ஒழியேல்
ஓதுவது- கற்பது ஒழியேல்- நிறுத்தாதே
நூல்களைக் கற்பதை நிறுத்தி விடாதே
12) ஓளவியம் பேசேல்
ஓளவியம்-பொறாமை மொழி
பொறாமை மொழிகளைப் பேசுதலை ஒழிப்பாயாக!!
13) அஃகஞ் சுருக்கேல்
அஃகு – தானியம் சுருக்கேல்- சுருக்காதே
நெல் முதலிய தானியங்களைக் குறைவாக விற்காதே!!

No comments:

Post a Comment